tamilnadu

img

செங்கல்பட்டு காவலர்கள் அட்டூழியம்: வாலிபர் சங்கம் கண்டனம்

செங்கல்பட்டு, மே 2- சர்க்கரை நோய்க்கு மருந்து வாங்கச் சென்ற இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த செங்கல்பட்டு காவலர்களின் அட்டூழியத்திற்கு வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து  மாவட்ட காவல் கண்காணிப் பாளருக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் அனுப்பியுள்ள புகார் கடிதம் வருமாறு:-

செங்கல்பட்டு திருமனணியில் வசிக்கும் திலகம் என்பவர் மகனுடன் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். சர்க்கரை நோய்க்கான மாத்திரை வாங்கிக்கொண்டு  அத்தியாவசிய தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்காக செங்கல்பட்டு பேங்க் ஆப் பரோடாவிற்கு சென்றிருக்கிறார்கள்.  பின்னர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.

அப்போது பிரேம்குமார் தன்னுடைய தாயை வங்கியில் நிறுத்தி இருப்பதாகவும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்காக வந்ததாக கூறியும், அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார். பிறகு, தாயாருடன் காவல் நிலையத்திற்குச் சென்ற எம் குமாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வாகனத்தை கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பி இருக்கிறார் காவல் ஆய்வாளர். சர்க்கரை நோய்  தாயாருடன் 6 கி.மீ தூரத்திற்கு நடந்தே வீடு சென்றார் பிரேம்குமார். காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் விதமாகவும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இந்த  சம்பவம் மிக மோசமாக உள்ளது.

காவல்துறைக்கு  அவப்பெயரை ஏற்படுத்தும் இந்த சம்பவத்தின் மீது அரசு  தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பறிமுதல் செய்தத வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.