tamilnadu

img

மதுக்கடையை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

உதகை, ஜூன் 22- உதகையில் உள்ள புதிய அக்ரஹாரம் பகுதியில் மதுப்பி ரியர்களின் இழிசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதால், பெண்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பு இல் லாத சூழல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் இயங்கும் மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ் யாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள புதிய அக்ரஹா ரம் பகுதியில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையானது 50க்கும் மேற்பட்ட குடியிருப்புக ளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கடையில் மதுவை வாங்கும் மதுப்பிரியர்கள் பலர்  அருகில் இருக்கும் குடியி ருப்பு பகுதிகளுக்குள் சென்று மது அருந்திவிட்டு தகாத வார்த் தைகளால் கூச்சலிடுவதும், அடிக்கடி சண்டையிட்டும் கொள்கின்றனர். மேலும், இப்பகுதியில் வசிக்கும் பெண்க ளையும், குழந்தைகளையும்  கண்டால் சத்தம் எழுப்பியும், விசில் அடித்தும் கேலி செய்து வருகின்றனர். இதன்காரண மாக பெண்களால் இங்குள்ள நடைபாதையை பயன்படுத்த வும்,  துணிகளை உலர்த்தவும்  முடிவதில்லை. வெளியில் வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.

 மேலும், வேலைக்கு செல்லும் பெற்றோர்கள்  இந்த மதுப் பிரியர்களால் தங்கள் பெண்குழந்தைகளுக்கு ஏதாவது அசம் பாவிதம் ஏற்பட்டுவிடுமோ  என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே பெண்குழந்தைகளை பாதுகாக்க  இந்த பகுதியில் உள்ள மதுக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை விடுத்தனர்.