உதகை, ஜூன் 9 - உதகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கிட வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் தூய்மை மற் றும் சுகாதாரப் பணியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் பணி யாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உரிய தேதியில் முறை யாக சம்பளம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர் ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் உள்ளிட்டவைகளுக்கு செலுத்திய கட்டண விபரத்தை தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
உதகமண்டலம் நகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். பழனிசாமி தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜெ. ஆல்தொரை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மேலும், மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரம், பொருளாளர் ஏ.நவீன் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நகராட்சி ஊழியர் சங்கத்தின் கௌரவத் தலைவர் எல். சங்கரலிங்கம், செய லாளர் சி.சேகர் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.