உதகை, மார்ச் 8- மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை நடத்தினர். மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு விதமான மக்கள் விரோ தப் போக்கை கடைபிடித்து வரு கிறது. பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்கப்படு வதும், குடியுரிமை திருத்தச் சட் டத்தை மக்கள் மீது வலுக்கட் டாயமாக திணிப்பதும் போன்ற மக்களுக்கு எதிரான பல்வேறு திட் டங்களை செயல்படுத்தி வருகி றது. இந்நிலையில், மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வித மாக மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் உதகையில் தொடங்கப் பட்டது. இந்த பிரச்சாரப் பயணம் உதகை நகரின் சேரிங் கிராஸ் பகுதியில் துவங்கி ஏடிசி, பேருந்து நிலையம், பெனட் மார்க்கெட் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிக ளின் வழியாக சென்று பிங்கர் போஸ்ட் பகுதியில் நிறைவ டைந்தது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எல்.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர் கே.ராஜேந்திரன் பிரச்சாரத் தைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் நிறைவு செய்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.