உதகை, மார்ச் 12- சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைக ளில் மெழுகுவர்த்தி ஏந்தி புதனன்று உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை நடத்தி னர். மார்ச் 8 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண் டாடப்பட்டது. இதன்ஒருபகுதியாக உதகையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக புதனன்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முத்துக் குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ.ஆர்.ஆசரா மெழுகுவர்த்தி ஏற்றி துவக்கி வைத்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் எச்.கோபால், செயலா ளர் தினேஷ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆனந்தன், கருவூல கணக்குத் துறை ஊழியர் சங்கத்தின் செய லாளர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், எல்ஐசி மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஏராள மான பெண்கள் கலந்துகொண்டு பெண்கள் உரிமைகளுக்காக போராடுவோம் என உறுதிமொழியேற்பு ஏற்றனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் உதகை வட்ட கிளைச் செயலாளர் ஷீலா நன்றி கூறினார்.