உதகை ,செப் 10 - மசினகுடி அருகே புலி தாக்கி உயிரிழந்த பெண் ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் குறும் பர்பாடி பகுதியில் வசித்து வந்த கெளரி என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க பழங்குடிப் பெண் புலி தாக்கியதில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மனிதனை கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்கவும் மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.