உதகை, டிச. 8- நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட மண் சரிவை அப்புறப்படுத்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த வாரம் முழுவ தும் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்க ளில் மண் மற்றும் பாறை சரிவு போன்றவை ஏற்பட் டது. இந்நிலையில் சிம்ஸ் பூங்காவில் இருந்து ஜிம்கானா பேரக்ஸ் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. ஆனால் ஒருவார காலமாகியும் மண்ணை அப்புறப்ப டுத்தாமல் உள்ளதால் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.