tamilnadu

img

நூறுநாள் வேலைக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காதது ஏன்?

கிராமப்புற ஏழைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசுகள்

சென்னை, அக். 25 - கிராமப்புற ஏழைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசுகள்  நூறுநாள் வேலைக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.  மூன்று மாதங்களாக இருக்கும் சம்பள பாக்கிகளை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டுமெனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர்,  மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  நூறுநாள் வேலைத் திட்டத்தின்படி வழங்கவேண்டிய வேலை நாட்களை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைத்து வெறும் 30 நாட்கள், 40 நாட்கள் என வழங்கப்பட்டு  வருகிறது. பல மாதங்கள்  வேலை வழங்காமல் இருப்பதும் தொடர்கிறது. மிகவும் சொற்பமாக வழங்கப்படும் இந்த வேலைக்கும் மாதக் கணக்கில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் விவசாய நெருக்கடியால் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், நூறு  நாள் வேலைத்திட்டத்தில் மாநில த்தின் பல்வேறு பகுதிகளில் பல மாதங்களாக வேலை வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாகியும் அவர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்காமல் இருப்பது வேதனையானது. தீபாவளி பண்டிகை வந்துவிட்ட இந்த நேரத்திலாவது தங்களுக்கு ஊதியம் கிடைக்காதா என்றிருந்த மக்களுக்கு ஊதியம் வழங் காமல் தாமதப்படுத்துவது மிகுந்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது. பண்டிகை காலத்திலும் இப்படி கிராமப் புற மக்களை பட்டினி போடும் மத்திய அரசையும் அதற்கு துணைபோகும் மாநில அரசையும் விவசாயத் தொழி லாளர் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது. கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவே ஆட்சி நடத்து கிறோம் என சொல்லிவரும் ஆட்சியாளர்கள் 100-நாள் வேலைத் திட்டத்தை சிதைப்பதும் வேலை நாட்களை குறைத்து வழங்குவதும் செய்த வேலைக்கு சம்பளம் பாக்கி வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. 

பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதும் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்துவதும் அவசர அவசியம் என பொருளாதார வல்லுநர் கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் இதுபோன்ற கிராமப்புற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் நெருக்கடியை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதை அரசு உணரவேண்டும்.  வி.வி.கிரி பவுண்டேசன் சார்பில் பொருளாதார அறிஞர் அனுப் சத்பவி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் கிராமப்புற மக்களின் நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் குறைந்தபட்ச கூலியை ரூ. 469 ஆக உயர்த்த வேண்டும் என்றும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூலி நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, மத்திய - மாநில அரசுகள் கிராமப்புற தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலியை உயர்த்தவேண்டும். ஊரக வேலைத்  திட்ட நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கியை உடன் வழங்கவேண்டும்.   இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.