tamilnadu

img

சுகாதார ஊழியர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்

சிவகங்கை,மே 1- சிவகங்கை நகராட்சி துப்புரவு ஊழியர்கள்  185 பேருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மைலாவதி , நகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் உலகநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் வீரையா, விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்கருப்பன், மாவட்ட பொருளாளர் வேங்கையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.கந்தசாமி,  வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.     கொல்லங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. கொல்லங்குடி கிளைச் செயலாளர் மெய்யப்பன் தலைமையில் கொல்லங்குடி,சாத்தப்புளி, அழகாபுரி ஆகிய ஊர்களில்  320 குடும்பத்திற்கு தலா பத்து கிலோ அரிசி வழங்கப்பட்டது.  சிபிஎம் ஒன்றிய க்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன், சிதம்பரம், விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.