தில்லி
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் இன்னும் தனது ஆட்டத்தை நிறுத்தாமல் வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 2.77 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9.02 லட்சம் பலியாகிய நிலையில், 1.98 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 81 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உலக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் கொரோனா நோயாளிகள் குணமடைவது தான். ஒவொரு நாளும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். அதிகளவு எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக சராசரியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் வீடு திரும்புகின்றனர். அமெரிக்கா (ஒரே நாளில் - 38 ஆயிரத்துக்கு மேல்), பிரேசில் (ஒரே நாளில் - 40 ஆயிரத்துக்கு மேல்) ஆகிய நாடுகள் அடுத்த 2 இடங்களில் உள்ளன.