tamilnadu

img

அமெரிக்காவில் மேலும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா...

நியூயார்க் 
உலகில் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது அமெரிக்காவை மிரட்டி வருகிறது. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடித்து வருவதாகக் கூறப்பட்டாலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தினமும் சராசரியாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்படுவதால் அமெரிக்க அரசு அடுத்து என்ன நடவடிக்கை என்பது தெரியாமல் விழித்து வருகிறது.  குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 844 ஆக உயர்ந்துள்ளது. 1,561 பேர் பலியாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 575 உள்ள நிலையில், 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் முன்னேற்றம் கண்டு வீடு திரும்பியுள்ளனர். 

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனவை விரட்ட தங்கள் நாட்டு மக்களைச் சல்லடை போட்டு அடைகாத்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் கொரோனவா பரவலைத் தடுப்பதை விட்டுவிட்டு சீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.