tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியது.... மேலும் 1,800 பேர் பலி 

நியூயார்க் 
கொரோனா என்னும் கொடிய வைரஸ் புவியுலகத்தை மிரட்டி வருகிறது. தினமும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பலி எண்ணிக்கையும் தாறுமாறாக இருப்பதால் உலகமே கொரோனா என்ற பெயரைச் சொன்னாலே நடுங்கி வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 36 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு அங்கு 11 லட்சத்து 31 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,897 பேர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 1.65 லட்சம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.