நியூயார்க்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டு அந்த நாட்டில் கடுமையான பாதிப்பை விளைவித்து வருகிறது.
அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24 ஆயிரத்து 713 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 12 லட்சத்து 12 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 1,324 பேர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 69 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை நிர்ணயம் செய்யும் நியூயார்க் நகரத்தில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. தினமும் மின்னல் வேகத்தில் பரவல் அதிகரிப்பதால் இதுவரை 3 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டாலே அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.