tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது...  

நியூயார்க் 
கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகி வரும் வல்லரசு நாடான அமெரிக்கா அந்த வைரஸ் மூலம் முக்கியமான இரண்டு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. முதலில் கொரோனா பாதிப்பில் இருக்கும் 8 லட்சம் பேரை குணப்படுத்துவது. 2-ஆவதாக மீதமுள்ள 2.92 கோடி மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது. இந்த 2 செயல்களும் சவாலானது என்பதால் கொரோனா மூலம் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 342 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்து நியூ ஜெர்சியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 922 ஆக உள்ளது.  

தனது நாட்டு மக்கள் கொரோனவால் கொத்துக்கொத்தாக மடிந்து வரும் நிலையில், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனா, ஈரான் ஆகிய நாடுகள் எந்த விதத்தில் மோதல் போக்கை கடைப்பிடிப்பது என்பதை ஆராய்ந்து வருகிறார்.