நியூயார்க்
200-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் பகுதியில் மையம் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் இத்தாலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டிலிருந்தாலும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.