tamilnadu

img

ஜப்பானிலும் 2-வது அலை... கடந்த 24 மணிநேரத்தில் 1200 பேருக்கு கொரோனா...  

டோக்கியோ 
உலக வரலாற்றில் இதுவரை பல்வேறு வைரஸ்கள் உருவாகி பலத்த சேதாரத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அது அழிந்து விடும். அழிந்த பின்பு மீண்டும் உருவானாலும் வீரியம் குறைந்ததாகவே இருக்கும். 

ஆனால் தற்போது உலகை தனது உள்ளங்கையில் வைத்திருக்கும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் வித்தியாசமான முறையில் பரவி வருகிறது. அதாவது கொரோனா வைரஸ் ஒரு பகுதியில் பரவி ஒழிந்துவிட்ட பின்பும் மீண்டும் அந்த பகுதியில், அதே வீரியத்துடன் தான் பரவுகிறது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பெயரை கேட்டாலே உலக மக்கள் ஒருவித கலக்கத்துடன் இருக்கிறார்கள். 

இதே நடைமுறையில் தான் ஐரோப்பா நாடுகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.  அங்கு கொரோனா வைரஸ் மே மாத இறுதியில் கட்டுக்குள் வந்தாலும் தற்போது மீண்டும் அதே வேகத்துடன் பரவி வருகிறது. இதில் ஸ்பெயின் நாடு முதன்மையாக உள்ளது. ஸ்பெயினை போலவே ஆசியக்கண்டத்தில் உள்ள ஜப்பான் நாடும் கொரோனா 2-வது அலையை எதிர்கொண்டு வருகிறது. 

அங்கு 2-வது அலையின் புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 1,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,022 ஆக உயர்ந்துள்ளது. 28 ஆயிரம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.