புதுச்சேரி, நவ. 24 - அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்தக் கோரி நவம்பர் 27ஆம் தேதி நடைபெறும் பந்த் போராட்டத்தை புதுச்சேரி வணிகர்கள் மற்றும் பொது மக்கள்பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர்ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- புதுச்சேரி மாநிலத்தில் அன்றாடம் உழைத்து பிழைக்கும் அமைப்புசாராதொழிலாளர்கள் எந்தவித சமூக பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்து வரக்கூடியஅவலநிலை தொடர்கிறது. மக்கள்தொகையில் சுமார் 70 சதமான உழைப்பாளி மக்கள்அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் ஊதியம், உணவு இல்லையென்றால் பட்டினி என்ற நிலையில் தான்வாழ்ந்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்குஎந்தவித சமூகபாதுகாப்பு திட்டமும் இல்லாநிலையிலும் இச்சமூகத்திற்காகஉழைத்து வரும் தொழிலாளர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நல வாரியங்கள்அமைத்து, அதற்கான நிதியை ஏற்பாடு செய்து உதவி வருகின்றன. புதுச்சேரியில்அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளிகளுக்கும் தனித்தனியே நல வாரியம்அமைத்துதர வேண்டும் என்று தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி, சி.ஐ.டி.யுசங்கமும் வலியுறுத்தி வருகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிநலசங்கத்தை புதுச்சேரி அரசு உருவாக்கியது, இந்த நலசங்கத்தை நலவாரியமாகஅமைத்து அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொழிலாளர்கள்நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். கடந்த 04.09.2019 அன்று வேலைநிறுத்தம் என்ற முடிவை அனைத்து சங்கமும் கூடிமுடிவெடுத்தனர். இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்துபுதுச்சேரிமுதல்வர், தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலர்ஆகியோர் 20 நாட்களுக்குள் நல வாரியம் அமைக்கப்படும் என்று உறுதிஅளித்தனர். மேலும் தீபாவளி பண்டிகை ரூபாய் 1,000/- கூப்பன் வழங்கப்படும்என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் உறுதிஅளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நல வாரியம் அமைக்கப்படவில்லை மற்றும்ரூபாய் 1,000/- பணம் வழங்கப்படவில்லை. இதற்கு துணைநிலை ஆளுநர் தடையாகஉள்ளதாகக் கூறீ அரசு கூறுவது பொருத்தமற்ற செயலாகும். எனவே வருகின்ற 27.11.2019 அன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் என்பதுஅனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கானபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நடைபெறக்கூடிய ஒரு நாள் பொதுவேலை நிறுத்தம் - முழு அடைப்புக்கு புதுச்சேரி சிறு வணிகர்களும், அனைத்துதரப்பு மக்களும் ஆதரவு தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.