புதுதில்லி:
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல் களைச் சந்தித்து வருகிறது. 2016-ஆம் ஆண்டில் பணமதிப்பு நீக்கம், 2017-இல் பொதுசரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) எனப் பொருளாதார வளர்ச்சியைச் சீர் குலைத்த நடவடிக்கைகள் ஏராளம். இவற்றின் பாதிப்புகள் இப்போதுவரை தொடர்ந்து வருகின்றன.இந்நிலையில்தான், தெற்காசிய பொருளாதார நிலை குறித்து, அக்டோபர் 13-ஆம்தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை, உலக வங்கி6 சதவிகிதமாக குறைத்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம்,இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7.5 சதவிகிதமாக உலக வங்கி கணித்திருந்தது. தற்போது அதிலிருந்து 1.5 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளது.“இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டுத் தேவை குறைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்7.3 சதவிகிதமாக இருந்த தனியார் நுகர்வு, இப்போது 3.1 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் இரண்டாவது காலாண்டில் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துகடந்த பத்தாண்டுகளில் இல்லாத மோசமான நிலையை எட்டியுள்ளது.” என்றுஉலக வங்கி தெரிவித்துள்ளது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளைவிட பின்தங்கி இருப்பதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.