tamilnadu

img

ரயிலில் இடம் கிடைக்காததால் பழைய காரை விலைக்கு வாங்கி ஊர் திரும்பிய தொழிலாளி

கோரக்பூர்:
ஷ்ராமிக் ரயிலில் இடம் கிடைக்காததால் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பழைய கார் ஒன்றை சொந்தமாக வாங்கி பாதுகாப்பாக தனது ஊர் சென்றடைந்தார்.உத்தரப்பிரசே மாநிலம் காசியாபாத்தில் பெயிண்டராக பணியாற்றி வந்தவர் லல்லன். ஊரடங்கால் வேலையின்றி தவித்த இவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான கோரக்பூர் செல்ல முடிவுசெய்தார். இதையடுத்து ஷ்ராமிக் ரயிலில் இடம் கிடைக்குமா என முயற்சித்துள்ளார். மூன்று நாட்கள் முயன்றும் இடம் கிடைக்கவில்லை. அதனால் தாம் வங்கியில் சேமித்து வைத்திருந்த ரூ.1,90,000 எடுத்து ரூ.1,50,000-க்கு ஒரு பழைய காரை வாங்கினார்.மே 29-ஆம் தேதி அன்று லல்லன் தனது காரில் காசியாபாத்திலிருந்து புறப்பட்டு மே 30-ஆம் தேதி கோரக்பூர் மாவட்டம் பி.பி.கஞ்ச்சை அடுத்துள்ள கைதோலியா கிராமத்தை சென்றடைந்தார்.

இதுகுறித்து லல்லன் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் நிலைமை சரியாகிவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் சீராகவில்லை. இனிமேல் நான் காசியாபாத் வரப்போவதில்லை. ரயில், பேருந்து களில் இடம் கிடைக்குமா என முயற்சித்துப் பார்த்தேன். இடம் கிடைக்கவில்லை. எனவே பழைய கார் வாங்கி எனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சொந்த ஊர் வந்து சேர்ந்தேன் என்றார். தற்போது அவரது குடும்பத்தினர் கொரோனா சோதனைக்குப்பின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.