மனித நுரையீரல் உயிரணுக்களில் கொரோனா வைரஸ் பரவுவதை குளோரோகுயின் தடுக்காது: ஆய்வு
ஆப்பிரிக்க பச்சை குரங்கு சிறுநீரக உயிரணுக்களில் கொரோனா வைரஸ் பரவுவதை இந்த மருந்து நிறுத்துகிறது, ஆனால் மனித நுரையீரல் உயிரணுக்களில் பயனற்றது என கூறும் இந்த ஆய்வு.
கொரோனா வைரஸ் நோய்க்கு (COVID-19) ஒரு தடுப்பூசி அல்லது நிரந்தர சிகிச்சை இல்லாதது, ஒரு தடுப்பு சிகிச்சைக்கான உலகளாவிய தேடலைத் தூண்டியுள்ளது, குளோரோகுயின் - மலேரியாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து எனவும்,இது கொரோனாவை அழிக்க உதவாது எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டது.
மார்ச் மாதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த மருந்து கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கியது.
ஆனால் கோட்டிங்கனில் உள்ள லீப்னிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் பிரைமேட் ஆய்வு மற்றும் ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஜெர்மன் பிரைமேட் சென்டரின் (டிபிஇசட்) நோய்த்தொற்று உயிரியல் பிரிவின் ஆராய்ச்சியாளர்கள், உண்மையில், கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்க மருந்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து அறிவுறுத்தினர்.
ஆப்பிரிக்க பச்சை குரங்கு சிறுநீரக உயிரணுக்களில் குளோரோகுயின் வைரஸ் தொற்றுநோயைத் தடுத்தாலும், மனித நுரையீரல் உயிரணுக்களில் பயனற்றது என கூறுகிறது இந்த ஆய்வு.
இந்த ஆய்வுகள் இந்திய நாட்டில் பயன்படுத்தும் குளோரோகுயின் மருந்துகளை பயனற்றது என கூறுவதன் மூலம், நம் இந்திய மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும் மருந்துகளை தடை செய்து விட்டு ,மற்ற நாடுகளில் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகளை நம் நாட்டுக்குள் நுழைக்கிறதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
உதாரணம்:
இந்தியாவில் உள்ள மும்பையில் கோரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்து 0.5 மி.கி. மாத்திரைகள் ஏழு ரூபாய்க்கு கிடைக்கின்றன.ஆனால் குளோரோகுயின் 250 மி.கி. மாத்திரைகள் 6.95 ரூபாய்க்கு கிடைக்கின்றன.
இதை ஒப்பிரும் போது 1 மி.கி. டெக்ஸாமெத்தாசோன் மாத்திரை 14 ரூபாய்க்கும்,1 மி.கி குளோரோகுயின் மாத்திரை 0.0278 ரூபாய்க்கும் கிடைக்கிறது என்றால் இடையே உள்ள தொடர்பும்,மேலை நாடுகள் ஏன் இந்த மாதிரியான ஆய்வுகளை மேற்க்கொண்டு நம் நாட்டு குளோரோகுயின் போன்ற மருந்துகளை பயனற்றது என்று சொல்வதன் நோக்கம் மக்களுக்கு புறிய வேண்டும்.