ம.பி. மாநிலத்தில் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
போபால், ஜன.16- இந்திய விடுதலைப் போராட் டத்தை காட்டிக்கொடுத்ததுடன், வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்தவர் வி.டி. சாவர்க்கர். மகாத்மா காந்தி படுகொலையிலும் கைது செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து தப்பியவர். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மத்தியப்பிரதேச மாநிலத்தில், வி.டி. சாவர்க்கரின் படம், நோட்டுப் புத்தகங்களில் இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. ரட்லம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில்தான், இவ்வாறு சாவர்க் கர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு கள் அடங்கிய நோட்டுப் புத்தகங் கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகார் கிடைத் ததை அடுத்து ஆய்வு செய்த மாவ ட்டக் கல்வி அதிகாரிகள், சம்பந்தப் பட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரி யரான கோராவாட் என்பவரை இடை நீக்கம் செய்துள்ளனர். வி.டி. சாவர்க்கரின் படம் தாங்கிய நோட்டுப் புத்தகங்களை, அரசு சாரா அமைப்பு ஒன்றிடம் கேட்டுப் பெற்று, அதனை மாண வர்களுக்கு கோராவாட் விநியோ கித்துள்ளார். இவ்வாறு சாவர்க்க ரின் படம்போட்டு நோட்டுப் புத்த கத்தை விநியோகிப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்றுவிட்டதாகவும் அவர், அரசு சாரா அமைப்பிடம் தவறான தகவலைக் கூறியுள்ளார். இந்நிலையிலேயே கோராவாட் மீது தற்போது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.