tamilnadu

img

சிறுபான்மையினர் மீது காவல்துறை அத்துமீறல்...உ.பி. மாநில பாஜக அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் நோட்டீஸ்

அலகாபாத்:
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து, உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், முஷாபர் நகர், வாரணாசி உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில், பொதுமக்கள் சுமார் 22 பேர் வரை உயிரிழந்தனர். மேலும், சிறுபான்மை முஸ்லிம் மக்களை, போலீசார் வீடு, வீடாக தேடிச்சென்று தாக்கியதாகவும், சொத்துக்களையும் சூறையாடியதாகவும், புகார்கள் எழுந்தன.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘நியூயார்க் டைம்ஸ்’, இதுகுறித்து விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தது. அதனை ஆதாரமாக வைத்து, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய்குமார், அலகாபாத் உயர்நீதிமன்றத் துக்கு கடிதம் எழுதி இருந்தார்.அந்த கடிதத்தை ஏற்று, அலகா பாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகோவிந்த் மதூர், நீதிபதிகள் விவேக்சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுதானாக முன்வந்து மூன்று உத்தரவு களை பிறப்பித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களின் போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்தபோலீஸ் வன்முறைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். மாநிலத்தில் இணையம் முடக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.