tamilnadu

img

மத்திய அரசே ஏற்க வேண்டும்

புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துச் செலவினங்களை 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, மே 3- புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான செலவுகளை, மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை, சமூக முடக்கத்தின் மூன்றா வது கட்டத்தில் உள்ள நிலைமைகளை விவரித்து, புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்களில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதித்திருக்கிறது. எனினும், இதற்காக மத்திய அரசாங்கம் எவ்வித மான நிதிப் பொறுப்பையும் ஏற்க மறுத் திருப்பதும், இது தொடர்பாக மாநில அர சாங்கங்களுக்கு அறிவுரைகள் எதுவும் கொடுக்காததும் அதிர்ச்சியளிக்கக்கூடி யதும், கண்டிக்கத்தக்கதுமாகும். புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு இடங்க ளிலிருந்து தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கி றார்கள். அவர்களே அதற்கான கட்டணமும் மற்றும் இடையே உணவு உண்பதற்கான செலவினத்தையும் அளிக்க வற்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். அதேபோன்று பேருந் தில் பயணம் செய்வோரும் அதீதமான தொகையை பேருந்துக் கட்டணமாக செலு த்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டி ருக்கிறார்கள். 

கடந்த இரு மாத காலமாக, சமூக முடக் கத்தின் விளைவாக எவ்வித வேலையும் இல்லாமல், வருமானம் ஏதுமின்றி இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களே சொந் தமாக ரயில் டிக்கெட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் கொடூரமான செயலாகும். அதே போன்று மத்திய அரசிடமிருந்து எவ்வித உதவியும் இதுவரையிலும் பெறாத மாநில அரசாங்கங்கள் அந்தச் செலவினை ஏற்க வேண்டும் என்று சொல்வதும் அம்மாநில அரசுகளால் தாங்க முடியாத ஒன்றாகும். 

புலம்பெயர் தொழிலாளர்கள் வீதியில் நிறுத்தப்பட்டதற்கு அவர்கள் எந்தவிதத்தி லும் பொறுப்பு அல்ல என்பதையும், மத்திய அரசாங்கம் நான்கு மணி நேர அறிவிப்பு கொடுத்து சமூக முடக்கத்தை அறிவித்ததே அதற்குக் காரணம் என்பதையும் மத்திய அரசு நினைவிற்கொள்ள வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான முழுப் போக்குவரத்துச் செலவினத்தையும் மத் திய அரசே ஏற்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை, அவர்கள் தற்போது இருந்திடும் மாநிலங்களில் உள்ள மாநில அரசாங்கங்களால் மேற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

    (ந.நி.)