tamilnadu

img

வேதம் படித்த மாணவரை தேடிப் பாராட்டிய மோடி!

புதுதில்லி:
வேத - சாஸ்திரப் படிப்பில் ‘மகாபரிக்ஷா’ பட்டம் பெற்ற 16 வயது மாணவரை, பிரதமர் மோடி, தேடிப்பிடித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.தேவதத்தா பாடில் மற்றும் அபர்ணா தம்பதியின் மகனான பிரியவ்ரதா, தனது ந்தையிடமே வேதம் மற்றும் சாஸ்திரங்களைக் கற்றுள்ளார். அத்துடன் மோகன் சர்மாஎன்பவரிடமும் குருகுல முறையில் கிரந்தங்கள் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்வெழுதி உள்ளார். அதில், சுமார் 40 வயதில் எழுதவேண்டிய ‘மகாபரிக்ஷா’ தேர்வை16 வயதிலேயே எழுதி சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.இத்தகவலை சாமு கிருஷ்ண சாஸ்திரி என்பவர், பிரதமர் மோடியை குறியிட்டு, தனதுட்விட்டரில் பதிவிட, பிரதமர் மோடி, வேலைமெனக்கெட்டு, “மிகவும் அபாரம்; பிரியவ்ரதாவுக்கு எனது பாராட்டுக்கள்; அவருடைய இந்தசாதனை மேலும் பலருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்று பதிவிட்டு, புளகாங்கிதம் அடைந்துள்ளார்.