tamilnadu

img

அரசு ஊழியர்கள் சம்பளத்தில் முப்பது சதவீதம் குறைப்பா?

 மத்திய அரசு மறுப்பு

புதுதில்லி, மே 11- மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30  சதவீதம் குறைக்கப்பட இருப்பதாக  வெளி யான செய்திகளை நம்ப வேண் டாம் என அரசு கூறியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஊரடங்கு காரணமாக  அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. தொழில்துறைகள் முடக்கம் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதற் கிடையே மக்களின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வருவாய் இழப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட இருப்பதாக  சில ஊடகங்களில் செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத்  தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு,  மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, பொய்யான செய்தி களை நம்ப வேண்டாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.