புதுதில்லி, ஏப். 20 - தில்லி திகார் சிறைக் கண்காணிப் பாளர், முஸ்லிம் சிறைவாசி ஒருவரின் முதுகில், பழுக்கக் காய்ச்சிய கம்பி யால் ‘ஓம்’ என்று எழுதி சூடு வைத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லி திகார் சிறையில் விசாரணை சிறைவாசியாக இருப்பவர் ஷபீர் என்ற நபீர். இஸ்லாமியரான இவர், குற்ற வழக்கு ஒன்றில் கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் சிறையில் இருந்து வருகிறார்.இதனிடையே, சமையல் பணியின்போது, இன்டெக்சன் அடுப்பு வேலை செய்யவில்லை என்று, சிறைக்கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானிடம் நபீர் புகார் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுகான், கம்பியைப் பழுக்கக்காய்ச்சி, நபீரின் முதுகில் சூடு வைத்துள்ளார். அதிலும், ஒரு இஸ்லாமியரான நபீர் முதுகில், சூடான கம்பியால் ‘ஓம்’ என்று இந்து மத அடையாளத்தை எழுதியுள்ளார்.அத்துடன் நபீரை பட்டினி போட்டு, “நீ நவராத்திரி காலத்தில் சாப்பிடாமல் இருந்ததால், முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டாய்” என்று திட்டமிட்டே மததுவேஷத்தில் ஈடுபட்டுள்ளார்.இக்கொடுமையை, தன்னைப் பார்க்க வந்த பெற்றோரிடம் நபீர் தெரிவிக்க, அவர்கள் நீதிமன்றத்தின் கவ னத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நபீர் தனக்கு நேர்ந்த கொடுமையை நீதிமன்றத்திலேயே நேரில் தெரிவித்துள்ளார். அதனைப் பதிவுசெய்து கொண்டுநீதிபதி, நபீருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், சிறை கண்காணிப் பாளர் ராஜேஷ் சவுகானை உடனடி யாக நீக்க வேண்டும் என்று உத்தர விட்டார். மேலும் சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, ஏனைய சிறைவாசிகளின் வாக்குமூலத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்; அத்துடன், அனைத்து சிசிடிவி பதிவுகளை இணைக்க வேண்டும் என்றும் சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.