tamilnadu

என் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் நேர்மைக்குக் கிடைத்துள்ள விருது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

புதுதில்லி, ஏப்.20-நாட்டில் இணையவழி வெளியாகும் செய்தித் தளங்கள் சிலவற்றில் எனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார் என்பது 20 ஆண்டு காலம் நீதிபதியாக இருந்தும் வெறும் 6.8 லட்சம் ரூபாய் மட்டுமே வங்கி இருப்பாக நான் கொண்டிருப்பதற்கு எனக்குக் கிடைத்திட்ட விருது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேதனையுடன் கூறினார். வழக்கத்திற்குமீறிய விதத்தில் சனிக்கிழமையன்று திடீரென்று அறிவித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தனக்கு எதிராக சில இணையதள செய்தித்தளங்களில் வெளியாகியுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்துபதிலளிக்கும்போது, “விஷயங்கள் மிகவேகமாக நகர்ந்து கொண்டிருக் கின்றன,” என்றும் “நீதித்துறையை பலிகடாவாக எவரும் மாற்ற முடியாது,” என்றும் கூறினார்.“ஒரு நபர் ஒரு நீதிபதியாக வர வேண்டும் என்று ஏன் தீர்மானிக்கிறார்? நற்பெயர் பெறுவதுதான் ஒரு நீதி பதிக்கு மிகவும் முக்கியம். அதற்கே தாக்குதல் வருமானால், பின் மீந்திருப் பது எது?” என்றும் அவர் கேட்டார்.“இது நம்ப முடியாததாகும். இவ்வாறெல்லாம் எனக்கெதிராக அவதூறை அள்ளிவீசுவதன் மூலம் என்னைத் தலைகுனிய வைக்க முடி யாது. என்னுடைய வாழ்நாளில் சம்பாதித்ததில் வங்கி இருப்பாக நான் பெற்றிருப்பது எல்லாம் வெறும் 6.8 லட்சம் ரூபாய் மட்டுமேயாகும். அவர்களால் நிறைய சம்பாதித்த வன் என்ற முறையில் என்னைக் கைப்பற்றமுடியவில்லை. எனவே, இத்தகையபுகாரை அவர்கள் எழுப்பியிருக்கிறார் கள். இருபது ஆண்டுகாலம் நீதிபதியாக இருந்த, ஓர் உச்சநீதிமன்ற நீதிபதிக்குக் கிடைத்திருக்கக்கூடிய விருது இது.


அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நீதித்துறை சுதந்திரம்

நாட்டில் நீதித்துறையின் சுதந்திரம் மிகமிக ஆழமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. நீதித்துறையின் இருக்கையில் அமர்ந்துகொண்டு இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் எவ்வித அச்சுறுத்தலுக்கும் சிபாரிசுக்கும் இடம் கொடாது, என் பணிக்காலம் நிறைவடையும் வரை யிலும் என்னுடைய கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவேன். என்னை எவரும் பணியவைத்துவிட முடியாது.”இவ்வாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார்.


பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றத்தில் முன்பு வேலை செய்த ஒரு பெண், சென்ற ஆண்டு தன்னிடம் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் பாலியல்ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார் என்று குற்றம்சாட்டி இருந்தார். மேலும் தான் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.உச்சநீதிமன்றத்தின் முன்னாள் ஊழியரான அவர் அங்குள்ள 22 நீதிபதி களுக்கும் புகார் அனுப்பியுள்ளார்.சுமார் அரைமணிநேரம் நடை பெற்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முடிவில் தன் மீது சுமத்தப் பட்ட புகார் மீதான வழக்கை அடுத்துஉச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக விளங்கும் நீதியரசர் மிஸ்ரா விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார்.


(ந.நி.)