tamilnadu

img

முதல் வன விலங்குகளுக்கான சிகிச்சை மையம் டெல்லி  ராஜோக்ரியில் அமைகிறது

இந்த ஆண்டின் இறுதிக்குள் டெல்லியில் முதல் வன விலங்குகளுக்கான சிகிச்சை மையத்தைப் அமைக்கஉள்ளதாக வனத்துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியுள்ளனர். 

டெல்லி ராஜோக்ரியில் 1.24 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு குரங்குகளுக்கான சிகிச்சை மையம் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டுள்ளது. இதனை மறுசீரமைப்பு செய்து விலங்குகளுக்கு உதவும் வகையில், வன விலங்குகளுக்கான சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் அமையவிருக்கும் இடத்தை 5 பேர் கொண்ட குழு ஆய்வு செய்யவுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இழப்பீடு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் வன விலங்குகளுக்கான சிகிச்சை மையத்திற்கான நிதியை அனுமதித்துள்ளது. ஒரு மாதத்தில் பணிகள் துவங்க உள்ளது. அதே நிலையில் ஆண்டு இறுதிக்குள் இந்த மையம் தயாராக இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

பறவைகளுக்கான மையத்தை அமைப்பதற்கு பதிலாக வன விலங்குகள் சிகிச்சை மையம் அமையும், என உச்சநீதிமன்றம் அமைத்த மத்திய குழு முன்மொழிந்த திட்டம் நிலுவையில் உள்ளது. இந்த மையத்தில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என பி.டி.ஐ நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா தொற்று காரணத்தால், பணிக்கான அனுமதி கிடையாதா நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த விலங்குகளுக்கான சிகிச்சை மையம் ஏற்படுத்த பல தூண்டுதல்கள் இருந்துள்ளது. குறிப்பாக பறவைகளும், ஊர்வன இனத்தை சேர்ந்த விலங்குகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவைத்துள்ளனர்.