tamilnadu

img

3 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி 8 முக்கியத் துறைகள் மோசம்

புதுதில்லி:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு, உரம்,ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின் உற்பத்திஆகிய துறைகள் நாட்டின் முக்கிய 8 துறைகளாக (Core Sector) கருதப்படுகின்றன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததுமுதலே, இந்த துறைகளின் வளர்ச்சி சரிவைக் கண்டு வருகிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின், வளர்ச்சி மிகமோசமான முறையில் தடைப்பட் டுள்ளது.தற்போது, இந்த 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சியானது, கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்து இருப்பது,மத்திய அரசே அளித்த புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

2019 ஆகஸ்ட் மாதம் வரையிலான கணக்கீடுகள் அடிப்படையில், 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி 0.5 சதவிகிதமாக சரிந்துள்ளது.இதற்கு முன்பு 2015 நவம்பரில்இந்தத் துறைகளின் வளர்ச்சி 1.3 சதவிகிதமாக இருந்ததே, மிகமோசமான சரிவாக கருதப்பட்டது. தற்போது அதைக்காட்டிலும் படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது.நிலக்கரித்துறை 8.6 சதவிகிதம், கச்சா எண்ணெய் தொழிற்துறை 5.4 சதவிகிதம், இயற்கை எரிவாயு தொழிற் துறை 3.9 சதவிகிதம், சிமெண்ட் துறைகள் 4.9 சதவிகிதம், மின் உற்பத்தித் துறை 2.9 சதவிகிதம் என்று சரிவைச்சந்தித்துள்ளன. உரம், ஸ்டீல் உற்பத்தித் துறைகள் மட்டும் தப்பியுள்ளன.