புதுதில்லி:
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற 15ஆவது நிதிக் குழுவின் கருத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 37ஆவதுஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவா தலைநகர் பானாஜியில்,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சிறு வணிகர்கள், விவசாயிகள், கைவினைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வரிச் சலுகைகளை அகற்றுவது பாதிப்பை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக வழங்கப்பட்டு வருவதையும், அந்த தொகை 2022ஆம் ஆண்டு வரை மட்டுமே வழங்கப்பட உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.