tamilnadu

img

சொப்னா ஆள்மாறாட்டமும் நடத்தியது அம்பலம்...

திருவனந்தபுரம்:
ஏர்-இந்தியா அதிகாரிக்கு எதிராக பாலியல் குற்றம் சுமத்த சொப்னா சுரேஷ் ஆள்மாறாட்டம் செய்ததை கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.ஏர்-இந்தியா ஸார்ஸ் மோசடி வழக்கில் சொப்னா ஆள்மாறாட்டம், மோசடி குற்றச்சாட்டு களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் முதலாவது குற்றவாளி பினோய் ஜேக்கப்பின் தகுதி சான்றும் போலி என்கிற முடிவுக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் வந்துள்ள னர். 

ஏர்இந்தியா சார்ஸ் நிறுவனத்தில் சொப்னா பணியாற்றிய போது ஏர்இந்தியா அதிகாரிக்கு எதிராக பொய்யான பாலியல் புகார் அளித்தார் என்பது வழக்கு. ஸார்ஸ் துணை தலைவராக இருந்த பினோய் ஜேக்கப் ஏற்கனவே முதல் குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்கு பிறகு ஸார்ஸ் நிர்வாக அதிகாரியாக இருந்த சொப்னாவை இரண்டாம் குற்றவாளியாக குறிப்பிட்டு சனியன்று திருவனந்தபுரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்தது.   2016 மார்ச்சில் கன்டோன்மென்ட் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் பினோய் ஜேக்கப் மட்டும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 2019 இல் இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சொப்னா சுரேஷையும் குற்றவாளியாக இணைப்பதாக நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு தெரிவித்தது. இரண்டு முறை அவரிடம் விசாரணை நடத்தியது குற்றப்பிரிவு. மீண்டும் ஆஜராக அழைத்த போது சொப்னா தலைமறைவானார். இப்போது என்ஐஏ காவல் முடிவடையும் நிலையில் உள்ளதால் தங்களது பொறுப்பில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு காவல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

பொய் சான்றிதழ் வழக்கு
என்ஐஏ காவல் முடிந்த உடன் சொப்னா சுரேஷை தங்களது பொறுப்பில் எடுத்து பொய் சான்றிதழ் வழக்கில் கன்டோன்மென்ட் காவல் துறையினர் விசாரிக்க உள்ளனர். பொய்யான பட்டதாரி சான்றிதழ் அளித்து வேலையில் சேர்ந்த சொப்னாவுக்கு எதிராக கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது பதிவு செய்ய வேண்டியுள்ளது.ஸ்பேஸ் பார்க் ஒப்பந்த வேலை பெறுவதற்காக சொப்னா பொய் சான்று அளித்துள் ளார். மகாராஸ்டிராவில் டாக்டர். பாபா சாஹிப் அம்பேத்கர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் பொய்யாக தயாரிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பொய்யானது என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதால் சொப்னாவை முதலாவது குற்றவாளியாக கொண்டு கடந்த 13 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கேரள தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்கள் அழிப்பு
அம்பலமுக்கு குடியிருப்புக்கு மாறும் போது தங்க தடத்தல் தொடர்பான சில ஆவணங்களை சொப்னாவும் சந்தீபும் சேர்ந்து அழித்துள்ளனர். பிடிபி நகரில் படயணி சாலையில் உள்ள வீட்டில் சொப்னா ஏற்கனவே குடியிருந்தார். இரண்டு ஆண்டுகள் வரை இங்கு அவர் குடியிருந்தார். அந்த வீட்டை காலி செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.