இந்தியாவில் விரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. புதிய நோட்டில் முந்தைய 10 ரூபாய் நோட்டு போலவே காந்தி படம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அப்படியே இருக்கும் அதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்து மட்டும் தான் சேர்க்கப்பட்டிருக்கும். அதேசமயம் பழைய 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மகாத்மா காந்தி சீரியஸில் வெளியிடப்பட்ட புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறம் கொண்டது. இது 63 மிமீ உயரம் கொண்டது. இதன் அகலம் 123 மிமீ கொண்டது. நோட்டின் முன்புறம் 10 என்பது தேவநாகரி மொழியில் எழுதப்பட்டிருக்கும். வலதுபுற மத்தியில் மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றிருக்கும். பின்புறம் கோனார்க் சூரிய கோவில் காணப்படும்.
புதிய 10 ரூபாய் நோட்டில் ’பாரத்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செக்யூரிட்டி திரட் இருக்கும். இடதுபுறம் அச்சிடப்பட்ட ஆண்டு மற்றும் ஸ்வச் பாரத் லோகோ காணப்படும்.