புதுதில்லி:
ஆண்களுக்கு இணையான பெண்களின் சமூக வளர்ச்சி நிலைஒப்பீட்டில், உலகளவில் இந்தியா 112-ஆவது இடத்திற்கு தள்ளப்பட் டுள்ளது.2018-ஆம் ஆண்டில், 108 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது அதைக்காட்டிலும் 4 இடங்கள்பின்தங்கியுள்ளது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கும் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், மற்றும்அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒப்பீட்டுஇடைவெளி, ‘பாலின இடைவெளி’(Gender Gap) என்று அழைக்கப்படுகிறது.அந்த வகையில், பாலின இடைவெளி குறித்த ஆய்வுகள் மற்றும்சர்வதேச அமைப்புகளின் சமீபத்திய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, உலக பொருளாதார மன்றம் (World Economic Forum -WEF), உலகளாவிய பாலினஇடைவெளி அறிக்கையை (Global Gender Gap Report 2020)வெளியிட்டுள்ளது.
அதில், ஐஸ்லாந்து, நார்வே மற்றும் பின்லாந்து நாடுகள் முதல்மூன்று இடங்களை பிடித்துள்ளன. ஆனால், 153 நாட்கள் கொண்ட பட்டியலில் இந்தியா படுமோசமாக 112-ஆவது இடத்திலேயே வந்துள்ளது.இந்தப் பட்டியலில், ஆசிய நாடுகளான சீனா 106 ஆவது இடத்தையும், இலங்கை 102-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் மிகமோசமாக 151-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.ஆண் - பெண் வளர்ச்சி நிலைகளிலுள்ள வேறுபாடுகளைக் குறைப்பதற்கு உலகளவில் இன் னும் 108 ஆண்டுகள் வரை ஆகும்என்று 2018-ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால்,இந்த காலவரையறை 2019-இல்99.5 ஆண்டுகளாக குறைக்கப்பட் டுள்ளது. அரசியல் அதிகாரம் அளிப்பதில்தான் மிகப்பெரிய இடைவெளிநிலவுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்களில் 35 ஆயிரத்து 127 இடங்கள் உள்ளன. இதில், 25 சதவிகித இடங்களில் மட்டுமே பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 3 ஆயிரத்து 343 அமைச்சர்களிலும், பெண்கள் 21 சதவிகிதம் பேர் மட் டுமே உள்ளனர்.