9 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சிவந்த பிரசிடென்சி - எஸ்எப்ஐ மகத்தான வெற்றி
கொல்கத்தா, நவ.16- கொல்கத்தா பிரசிடென்சி பல்க லைக்கழக மாணவர் பேரவைக்கான தேர்தலில் இந்திய மாணவர் சங் கத்தின்(எஸ்.எப்.ஐ) வேட்பாளர்கள் அனைத்து மத்திய நிர்வாகிகள் பொறுப்புகளிலும் வெற்றி பெற்றுள் ளனர். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.எப்.ஐ, அதன் பிறகு நடந்த தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. தீவிர இடது சாரிகள் மற்றும் சில அமைப்புகள் இணைந்து சுயேச்சைகள் ஒருங்கி ணைப்பு என்ற அமைப்பை உரு வாக்கியிருந்தனர். அந்த அமைப்பு தான் இங்கு வெற்றி பெற்று வந்தது. மாணவர் பேரவைத் தலைமைப் பொறுப்பை இவர்கள் ஏற்றாலும், பல்வேறு பிரச்சனைகளில், குறிப் பாக பெண்கள் பிரச்சனைகளில் பொறுப்பான தலையீடுகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்திய மாணவர் சங்கம் தான் இந்தப் பிரச்சனைகளைக் கை யில் எடுத்துப் போராடியது. ஜனவரி மாதத்தில் நடந்த வீரஞ்செறிந்த போராட்டம் மாணவர்களை இந்திய மாணவர் சங்கத்தின் பக்கம் அணி திரட்ட உதவியது.
2017 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனை த்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் பேரவைகள் ரத்து செய்யப்பட்டன. அவற்றிற்கு தேர்தல் கள் நடத்தப்படுவதில்லை என்ற முடிவை மாநில அரசு எடுத்தது. இந்த உத்தரவை தற்போது திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதால் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வாக்கெடுப்பு நடந்துள்ளது. ஜாதவ்பூர், ரவீந்திர பாரதி மற்றும் டயமண்ட் ஹார்பர் ஆகிய பல்கலைக்கழகங்களில் தேர் தல் நடக்கவிருக்கின்றன.
“மீண்டும் சிவப்பாவோம், வாருங்கள்”
பிரசிடென்சி பல்கலைக்கழகத் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், இந்திய மாணவர் சங்கம் களத்தில் இறங்கியது. மாணவர்களிடமிருந்து கிடைத்த “மீண்டும் சிவப்பாவோம், வாருங்கள்” என்ற முழக்கத்தை எஸ்.எப்.ஐ. கையில் எடுத்துப் பிரச்சா ரம் செய்தது. ஊடகங்களோ, பாஜக வின் ஏபிவிபிக்கும், திரிணாமுலின் சத்ரா பரிசத்துக்கும் இடையில் கடு மையான போட்டி இருக்கும் என்று எழுதின. வரவிருக்கும் தேர்தலுக் கான முன்னோட்டமாக இது அமை யும் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியிடப்பட்டன.
ஊடகங்களின் முயற்சிகளை மீறி கடந்த பல ஆண்டுகளாகத் தேர்த லில் வெற்றி பெற்று வந்த சுயேச்சை கள் ஒருங்கிணைப்புக்கும், எஸ்.எப்.ஐ க்கும் இடையில்தான் போட்டி இருந் தது. வகுப்புகளுக்கான பிரதிநிதி களில் மொத்தமுள்ள 116 இடங்களில் எஸ்.எப்.ஐ. 58 இடங்களைப் பெற் றது. சுயேச்சைகளுக்கான ஒருங்கி ணைப்புக்கு 50 இடங்கள் கிடைத்தன. ஆனால், பல்கலைக்கழக மத்திய நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஐந்து இடங்களையும் எஸ்.எப்.ஐ- கைப் பற்றியது. தலைவராக மிமோசா கோரல், துணைத் தலைவராக அங்கிதா, பொதுச் செயலாளராக சவுரன் மாலிக், கூடுதல் செயலாள ராக தீப்ரஜித் தேப்நாத், மாணவி களுக்கான பொதுப் பிரிவு செயலாள ராக ஸ்ருதிராய் முகுரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பாஜகவின் ஏபிவிபியும், திரிணா முல்லின் சத்ரா பரிசத்தும் படுதோல்வி யைச் சந்தித்துள்ளன. இந்த வெற்றி குறித்துக் கருத்து தெரிவித்த எஸ்.எப்.ஐ.யின் அகில இந்திய பொதுச் செயலாளர் மாயுக் பிஸ்வாஸ், “முற் போக்கு எண்ணங்கொண்ட பிரசி டென்சி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்துடன் உள்ள னர். நாடு முழுவதுமுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் முற்போக்கு மாணவர் இயக்கங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இதில் மேற்குவங்கமும் விதிவிலக்கல்ல” என்று குறிப்பிட்டார். அண்மையில் நடந்த தேர்தல்களில் ஜவகர்லால் நேரு, பாண்டிச்சேரி, ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு தனது வாழ்த்துக் களை பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளரான சூர்ய காந்த் மிஸ்ராவும் டுவிட்டர் மூலமாகத் தனது வாழ்த்துக்களைத் தெரி வித்துள்ளார். “பிரசிடென்சி பல்க லைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் அபாரமான வெற்றி பெற்றுள்ளதற்கு இந்திய மாணவர் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று அவர் அதில் குறிப்பிட்டி ருக்கிறார்.
பல்கலைக்கழக மத்திய நிர்வாகிகள் வாக்கு விபரம்
தலைவர்
எஸ்.எப்.ஐ - 1085
சுயேச்சைகள் ஒருங்கிணைப்பு - 613
துணைத்தலைவர்
எஸ்.எப்.ஐ - 999
சுயேச்சைகள் ஒருங்கிணைப்பு - 640
பொதுச் செயலாளர்
எஸ்.எப்.ஐ -840
சுயேச்சைகள் ஒருங்கிணைப்பு - 574
எஸ்.ஜி.எஸ் - 257
து. பொதுச் செயலாளர்
எஸ்.எப்.ஐ - 919
சுயேச்சைகள் ஒருங்கிணைப்பு - 642
பெண்களுக்கான பொதுப்பிரிவு செயலாளர்
எஸ்.எப்.ஐ - 411
எஸ்.ஜி.எஸ் - 307
சுயேச்சைகள் ஒருங்கிணைப்பு - 237