வாரணாசி:
வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில், டாக்டர் பெரோஸ்கான் சமஸ்கிருதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த 20 பேர் யாகம்நடத்தியும், பூஜை செய்தும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.‘ஒரு முஸ்லிமான பெரோஸ்கானிடம், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று கூறி, கல்வி நிலையத்திலும் மதப்பிரிவினையை தூண்டிவிட்டனர். “வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் கற்பிக்க வேண்டுமென்றால் நான்ஒரு இந்துவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் நான்சமஸ்கிருத இலக்கியம் மட்டுமே கற்றுத் தர வந்துள்ளேன்; இதில் மதம்எங்கே வந்தது?” என்று பெரோஸ் கான்கூறியதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.மறுபுறத்தில், பெரோஸ்கானுக்கு ஆதரவாக, வாரணாசி இந்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர். சக பேராசிரியர்களும் பெரோஸ்கானுக்கு துணை நின்றனர்.ஆனால், தன்னால் பிரச்சனை நீளவேண்டாம் என்று கருதிய சமஸ்கிருதப் பேராசிரியர் பெரோஸ்கான், வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையிலிருந்து தானாகவே விலகி, அதே பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் பேராசிரியராக இணைந்துள்ளார். கலைத்துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றத் துவங்கியுள்ளார்.