புதுதில்லி:
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி)வங்கியின் நடவடிக்கைகளை முடக்கி வைத்து ரிசர்வ்வங்கி கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது.வங்கி நிர்வாகத்தில் அரங்கேறிய முறைகேடுகள் காரணமாகவும், பிஎம்சி வங்கியின் வராக்கடன் ரூ. 2 ஆயிரத்து 500 கோடியை தாண்டிய பின்னணியிலும், இந்த நடவடிக்கையை எடுத்தரிசர்வ் வங்கி, பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த 6 மாதங்களுக்கு தங்களது வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான் எடுக்க முடியும் என்றுகட்டுப்பாடு விதித்தது. தற் போது அதனை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து இருந் தாலும் கட்டுப்பாடுகள் தொடருகின்றன.பிஎம்சி வங்கியின் தற்போதைய நிலைக்கு, அதன் இயக்குநர்களாக இருக்கும் பாஜகவினர்தான் காரணம்என்றும், அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கடன்கொடுத்து, பிஎம்சிவங்கியையே சூறையாடியதும் ஏற்கெனவே தெரிந்தவிஷயமாகும். பிஎம்சி வங்கியின் இணை இயக்குநராக இருக்கும் ராஜ்நீத் சிங், பாஜக எம்எல்ஏ-வான சர்தார்தாரா சிங்கின் மகன் என்பதும் அறிந்ததே.இந்நிலையில், பிஎம்சி வங்கியின் இயக்குநர்கள் அனைவருமே கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தங்களின் பெயருக்கு முன் னால் ‘சவுக்கிதார்’ என போட்டுக் கொண்டவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது பெயருக்கு முன்னால், சவுக்கிதார்.. அதாவது ‘காவல்காரர்’ என்று சேர்த்துக்கொண்டார். அவரை பின்தொடர்ந்து பாஜக தலைவர்களும் சவுக்கிதார் என்று போட்டுக்கொண்டனர். ஆனால், அவ்வாறு ‘காவல் காரர்’ என்று தங்களை அழைத்துக் கொண்ட பாஜகதலைவர்கள்தான், பிஎம்சிவங்கியை சூறையாடியுள்ளனர்.