tamilnadu

img

பிடிஐ நிறுவனத்திற்கு  ரூ. 84கோடி அபராதம்...

புதுதில்லி:
இந்தியாவின் முதன்மை செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவுக்கு (பிடிஐ) மத்திய வீட்டுவசதி அமைச்சகம் ரூ. 84 கோடியே 48 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாககுற்றம்சாட்டி, இந்த அபராதத்தை மோடிஅரசுவிதித்துள்ளது.இதுதொடர்பாக, பிடிஐ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய வீட்டுவசதித் துறை, “தில்லி சன்சாத் மார்க் பகுதியில் பிடிஐ நிறுவன அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு 1984 ஆம் ஆண்டிலிருந்து நிலவாடகை செலுத்தவில்லை; அத்துடன், அடித்தளத்தையும் ஒரு அலுவலகமாக மாற்றி, நில ஒதுக்கீடு விதிமுறைகளை பிடிஐ தவறாகப்பயன்படுத்தியுள்ளது” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கி யுள்ளது. அபராதத் தொகை, ரூ. 84 கோடியே 48 லட்சத்தை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் நோட்டீசில் தெரிவித்துள்ளது.

அண்மையில், இந்திய - சீன எல்லை விவகாரத்தில், தேச நலனுக்கு விரோதமாக செய்திகளை வெளியிடுவதாக பிடிஐ நிறுவனத்தை மத்திய அரசின் பிரசார் பாரதி குற்றம் சாட்டியிருந்தது. பிடிஐ-க்கான சந்தா (ரூ. 7 கோடி) செலுத்து வதை நாங்கள் ஏன் நிறுத்தக் கூடாது..? என்றும் பிரசார் பாரதி ஒரு கடிதத்தை பிடிஐ- நிறுவனத்திற்கு அனுப்பியது.தற்போது ரூ. 84 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று புதிய நெருக்கடியை பிடிஐ நிறுவனத்திற்கு, மத்திய அரசு கொடுத்துள்ளது. தாமதிக்கும்பட்சத்தில் 10 சதவிகித வட்டியும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.