புதுதில்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund - EPF) சேமிப் புக்கான 8.50 சதவிகித வட்டிவிகிதத்தை இரண்டு தவணையாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைக் காரணம் காட்டி,இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற் கான வட்டி விகிதத்தில் 8.15 சதவிகிதத்தை மட்டும் இப்போதுவழங்கி உள்ளது. மீதமுள்ள0.35 சதவிகிதம் “தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப் பின் பங்கு முதலீடுகளை ‘மீட்டெடுத்த’ பிறகு டிசம்பரில் வரவுவைக்கப்படும்” என்று தெரிவித் துள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தனது 6 கோடி சந்தாதாரர்களுக்கு 8.50 சதவிகித வட்டி விகிதத்தை ஒரே தவணையில் வழங்கி னால், 2019-20ஆம் ஆண்டில்ரூ.2 ஆயிரத்து 500 கோடி பற் றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறங்காவலர் குழு கூட்டம், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்தலைமையில் புதன்கிழமையன்று நடந்தது.
இந்த கூட் டத்தில்தான் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்குஇபிஎப் சேமிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட 8.50 சதவிகித வட்டி என் பதே கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத குறைவான வட்டி விகிதம் ஆகும். முந்தைய நிதியாண் டில்கூட இபிஎப்ஓ அமைப்பு அதன் சந்தாதாரர்களுக்கு 8.65 சதவிகிதம் வட்டி வழங்கியிருந்தது.அவ்வாறிருக்கையில், சொன்னபடி 2020 டிசம்பரில் மீதமுள்ள 0.35 சதவிகித வட்டிவிகிதத்தை மத்திய பாஜக அரசால் வழங்க முடியாவிட்டால், அது 1977-78இல் இபிஎப்ஓ அமைப்பு தொடங்கப்பட்டதற்கு பிந்தைய 43 ஆண்டுகாலத்தில் இல்லாத மிகக் குறைவான வட்டி விகிதமாக அமையும்.நிலைமையும் அவ்வாறுதான் உள்ளது. ஏனெனில் இபிஎப்ஓ நிதியை எடுத்து, 2018-19 நிதியாண்டில் ரூ. 27 ஆயிரத்து 974 கோடியும், 2019-20 ஆண்டில் ரூ. 31 ஆயிரத்து 501 கோடியும் பங்குச்சந்தை மற்றும் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த முதலீடுகளுக்கு குறைந்த வருவாயே கிடைத் துள்ளது. எனவே இந்த நிதியாண்டிற்கான வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே தொழிலாளர் அமைச்சகத்தால் அறிவிக்கப் படும் என்று கூறப்படுகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 1977-78ஆம் ஆண்டில் மிகக்குறைவாக 8 சதவிகித வட்டி விகிதத்தை தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்தது.