tamilnadu

img

15 ஆயிரம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த ரெனால்ட்....

புதுதில்லி:
கொரோனா தாக்கத்தைக் காரணமாகக் காட்டி, உலகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக ‘ரெனால்ட்’ (Renault)ஆட்டோமொபைல் நிறுவனம் அறிவித்துள் ளது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் ரெனால்ட். உலகின் பல்வேறு நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவிலும் சென்னையை அடுத்த ஒரகடம் நகரத்தில் ‘நிசான்’ (Nissan) நிறுவனத் துடன் இணைந்து, கார்களை உற் பத்தி செய்து வருகிறது.இந்நிலையில்தான், தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 15 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக ‘ரெனால்ட்’ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த மூன்றுமாதங்களாகவே கொரோனா பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும்சூழலில், வாகன விற்பனையும் ஏற்றுமதியும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் வருவாய் ஒருபுறம் குறைந்து விட்டது என்றால், மற்றொரு புறத்தில் தங்களின் செலவுகள் மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதே காரணத்தையே ரெனால்ட் நிறுவனமும் கூறியுள்ளது.

தலைமையகம் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமாராக 4 ஆயிரத்து 600 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்; எஞ்சிய 10 ஆயிரம் பேர் உலகம்முழுக்க இருக்கும் மற்ற கிளைகளில்இருந்து பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ரெனால்ட் கூறியுள்ளது.இதன் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளில் 2 பில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்த முடியும் என கணக்குப் போட்டுள்ளது.ரெனால்ட் நிறுவனத்தில், உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான ஊழியர்களை மட்டுமே தற்போது பணிநீக்கம் செய்திருப்பதாக ரெனால்ட் கூறி இருக்கிறது.இந்நிறுவனம் 2019ஆம் ஆண்டில்40 லட்சம் கார்களை உற்பத்தி செய்திருந்தது. இதனை 2024-ஆம் ஆண்டில்33 லட்சமாக குறைத்துக் கொள்வதென்றும் முடிவு செய்திருக்கிறது.ரெனால்ட் கம்பெனியின் மொத்தபங்கில் சுமார் 15 சதவிகிதப் பங்குகளை பிரான்ஸ் நாட்டு அரசாங்கமே கையில் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.