புதுதில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, கடந்த 2017-18 நிதியாண்டில் 8.55 சதவிகிதம் வட்டி மட்டுமே வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய 5 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு குறைந்த வட்டி விகிதமாக இது இருந்தது.தொழிற்சங்கங்கள் எவ்வளவோ போராட்டம் நடத்தியும், வட்டி விகிதத்தை உயர்த்த முடியாது என்று மோடி அரசு கூறிவிட்டது.இந்நிலையில், 2018-19 நிதியாண்டிற் காவது வட்டியை உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் கோரிக்கை எழுப்பி வந்தனர். ஆனால், வழக்கம்போல தொழிலாளர்களை வஞ்சிக்கும் திட்டத்துட னேயே மோடி அரசு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு ஆண்டுதோறும் எவ்வளவு வட்டி வழங்குவது என்பதை, வழக்கமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees’ Provident Fund Organisation - EPFO) தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை இணைந்தே முடிவு செய்கின்றன.
அந்த வகையில், 2018-19 நிதி யாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசிக்க, கடந்த பிப்ரவரி மாதமே தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் இ.பி.எப்.ஓ. அறங்காவலர் குழு கூட்டம் நடை பெற்றது.இந்த கூட்டத்தில், 2018-19 நிதியாண்டுக்கான வட்டியை 8.65 சதவிகிதமாக உயர்த்த பரிந்துரைக்கப் பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மற்றும் இ.பி.எப்.ஓ. அறங்காவலர்கள் சார்பில் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டது. வட்டி உயர்த்தப்பட வேண்டும் என அவர்கள் உறுதியாகவும் இருந்தனர்.அரசிடம் போதுமான நிதி கையிருப்புஉள்ளது என்பதையும் தேர்தலுக்கு முன் நரேந்திர மோடி இந்த வட்டி விகித உயர்வுக்கு சாதகமாகப் பேசியதையும் கூட, இ.பி.எப்.ஓ. அறங்காவ லர்களும் (Central Board of Trustees of EPFO), தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகளும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், வழக்கம்போல இ.பி.எப். வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு மத்திய நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொழிலாளர் துறை அமைச்சகமும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமும் தங்களது பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிதியமைச்சகம் அறி வுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டியை உயர்த்தினால் ரூ. 150 கோடி வரை நிதிச்சுமை ஏற்படும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டும், இதேபோல வட்டி விகித உயர்வுக்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்தது. கூடுதல் நிதிச்சுமைஎன்று கூறியது. அப்போது, ஒரு சிலைஅமைப்பதற்கு 5 ஆயிரம் கோடியை செலவிடும் அரசு, 6 கோடி தொழிலாளர் களுக்கு வெறும் 150 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதால் மட்டும் நிதிச் சுமைக்கு ஆளாகுமா? என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
எனினும், முன்பு கூறிய கார ணத்தையே இந்த ஆண்டும் முன்வை த்து, 6 கோடி தொழிலாளர்களை வஞ்சிக்க மோடி அரசு துணிந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு, 2013-14 மற்றும் 2014-15ஆம் நிதியாண்டில் 8.75 சதவிகிதம், 2015-16ஆம் நிதியாண்டில் 8.8 சத விகிதம், 2016-17ஆம் ஆண்டில் 8.65 சதவிகிதம் என வட்டி வழங்கப்பட்டது. இதுவே 2017-18 நிதியாண்டில் மிகமோசமான வகையில் 8.55 சதவிகிதமாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.