ஜெய்ப்பூர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களைப் பரிசோதனை செய்ய மணிக் கணக்கில் ஆகிவிடுகிறது. விரைவாகக் கண்டறிய ரேபிட் கிட் எனப்படும் புதிய பரிசோதனை கிட்டை சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்தது. வெறும் 30 நிமிடத்தில் இந்த கருவி கொரோனா பரிசோதனையைத் துரிதப்படுத்துவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் இதனை வாங்கியுள்ளன.
தமிழகமும் 24 ஆயிரம் ரேபிட் கிட் வாங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் அரசு ரேபிட் கிட் பரிசோதனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை முடிவுகள் 90 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்க வேண்டும். ஆனால் இந்த புதிய ரேபிட் கருவி வெறும் 5.4 சதவீதம் மட்டுமே துல்லியமாக இருப்பதால் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.