புதுதில்லி:
நாடாளுமன்ற மாநிலங்களவை இம்மாதம் 29-ஆம் தேதி கூடுகிறது. இதற் கான உத்தரவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.
இதன்படி மாநிலங்களவை இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.17-ஆவது மக்களவை வரும் 17-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து 20-ஆம் தேதி நடை பெறும் இரு அவைகள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார். மக்களவையில் அடுத்த மாதம் 5-ஆம் தேதி 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது.