tamilnadu

img

மாநிலத்துக்கு நிதியை குறைத்த மத்திய அரசு சுதந்திர தினவிழாவில் புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஆக. 16- புதுச்சேரிக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்துள் ளது என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார். புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் 73ஆவது சுதந்திரதின விழா வியா ழனன்று (ஆக. 15) நடைபெற்றது. தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் நாராயணசாமி, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின்னர் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில், புதுச்சேரி மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசின் மக்கள்  நலன் சார்ந்த திட்டங்கள் பல மாநி லங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் நிலையில்,  மத்திய  அரசு  வழங்கி வந்த மக்கள் நலத்  திட்டங்களுக்கான நிதி வெகுவாக குறைத்துள்ளது. இதனால் ஆண்டு தோறும் மத்திய அரசின் நிதியை பெறுவதென்பது மிகப்பெரிய சவா லாகவே உள்ளது. ஆயினும் அதை  எதிர்கொண்டு மக்கள் நலத் திட்டங்  களை தங்கு தடையின்றி நிறை வேற்றி வருகிறோம் என்றார்.  மேலும் வேளாண், கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியை பட்டியலிட்ட முதல்வர் நாராயணசாமி அதன் வளர்ச்சியை எடுத்துரைத்தார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்க ளுக்கு முதல்வரின் சுழர் கேடயங் கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதே போல் ராணுவ அணிவகுப்பில் சிறப்பாக  பங்கேற்ற  முப்படை பிரிவுகள், காவல்துறை, பள்ளி மாணவர்களுக்கும் முதல்வர் சுழற்கேடயங்களை வழங்கி பாராட்டினார். மாணவர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சியோடு விழா நிறைவடைந்தது. விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் சிவக்  கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவா யம், கந்தசாமி, தலைமைச் செயலா ளர் அஸ்வன்  குமார் உள்ளிட்ட அரசு  அதிகாரிகள், ஊழியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.  அதேபோல் புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்திலும் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.