புதுதில்லி, ஏப். 10-பிரதமர் நரேந்திரமோடி தொடர்பான வரலாற்றுத் திரைப்படத்தை, தேர்தல் முடியும்வரை திரையிடக்கூடாது என்றும் இப்படம் தொடர்பாக மின்னணு ஊடகங்களிலும் எதுவும் காட்டப்படக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி குறித்த வரலாற்றுத் திரைப்படம் தேர்தல் ஆதாயத்திற்காகவே தற்சமயம் வெளியிடப்படுகிறது என்றும் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என்றும் பல்வேறு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திற்கு முறையீடு செய்து வந்தனர். இவற்றைத் தொடர்ந்தே தேர்தல் ஆணையம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. (ந.நி.)