tamilnadu

img

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை மாற்றுக! சிறப்புப் பார்வையாளர் நியமித்திடுக!

மதுரை, மே 9-4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல், மக்களவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக, நேர்மையாக, நியாயமாக நடைபெற தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும். இப்பணிகளை கண்காணிக்க சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார்.வியாழனன்று மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:தமிழக தேர்தல் ஆணையம் ஒரு தில்லுமுல்லு ஆணையமாக காட்சியளிக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதன் நடவடிக்கை களும் அவ்வாறே உள்ளன. குறிப் பாக, மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக,பாஜகவினர் செய்யும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

உதாரணத்திற்கு, மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அறைக்கு அதிகாரிகள் சென்ற விவகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றதை தொடர்ந்தே மதுரை ஆட்சியராக இருந்த ச.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளார். இதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியும்.தேர்தல் ஆணையம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு, மக்களையும் குழப்புகிறது. முதலில்10 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு என்றார்கள். பின்னர் 13 மக்களவைத் தொகுதிகளில் 46வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறினார்கள். இப்போது தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்போவ தாக அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது. தேர்தல் ஆணையம் தினந்தோறும் மாறி மாறி பேசி வருகிறது.தேனி மக்களவைத் தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு ப்பதிவு நடத்தப்போகிறோம் என்பதற்காக 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்துள்ளது. இது அரசியல் கட்சியின ரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இவ்வளவு குழப்ப நிலையில் உள்ள தேர்தல் ஆணையத்தால் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமூகமாக நடத்த முடியும்?எனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். அல்லது தேர்தல் சிறப்பு பார்வை யாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகியதொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் ரூபாய் 3000 முதல் 5000 வரை வழங்கு வது என்பன உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். எத்தகைய முறைகேடுகள் நடைபெற்றாலும் 4 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.மற்றொருபுறத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 3 அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எடப்பாடியின் இந்தநடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக அதிமுக எத்தகைய நிலைபாட்டை யும் எடுக்க தயங்காது என்பதை இது தெளிவாக்குகிறது.

மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ஒப்புகைச் சீட்டை ஒருதொகுதிக்கு 5 வாக்குச்சாவடி களில் ஒப்பிட்டுப் பார்க்கப்போவதாக தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. ஆனால், இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கோ, வேட்பாளர்களுக்கோ, அவர்களின் முகவர்களுக்கோ தேர்தல் ஆணையம் எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் உடனடியாக கூட்டத்தை கூட்டி ஒப்புகைச் சீட்டை வாக்குப்பதிவோடு ஒப்பிடுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.மேலும், அவர் கூறுகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் செவ்வாயன்று ஏற்பட்ட மின்தடையால் 5 நோயாளிகள் இறந்துள்ளனர். இது அதிர்ச்சி யளிப்பதாய் உள்ளது. இறந்தவர்கள் மின்தடையால் இறக்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே கவலைக் கிடமான நிலையில் இருந்துதான் இறந்துள்ளார்கள் என மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறுவது பொருத்தமானதாக இல்லை. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.