tamilnadu

img

பி.எம். கேர்ஸூக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி.... வாரிக் கொடுத்த பொதுத்துறை நிறுவனங்கள்

புதுதில்லி:
‘பி.எம். கேர்ஸ்’ அமைப்பிற்கு, ஓஎன்ஜிசிஉள்ளிட்ட நாட்டின் 38 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 2,105 கோடி நிதியை நன் கொடையாக வாரி வழங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கிடைத்த ஆவணங்களின் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.பி.எம். கேர்ஸ் அமைப்பிற்கு வந்த நன்கொடை மற்றும் அதன் வரவு - செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்றுதொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட் டன. உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் என்று வழக்குகளும் தொடுக்கப் பட்டன. ஆனால், ‘பிஎம் கேர்ஸ்’ அமைப்பானது ஆர்டிஐ வரம்பு, அரசின் தணிக்கைவரம்பு எதற்குள்ளும் வராது என்று மத்தியஅசு கூறி விட்டது. ‘பிரதமர் நிவாரண நிதியம்’ என காலம் காலமாக இருக்கும் போது, புதிதாக ‘பிஎம் கேர்ஸ்’ எதற்கு? என்பதற்கும், பிஎம் கேர்ஸ் நிதியை, பிரதமர் நிவாரண நிதியத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பதிலில்லை.

இந்நிலையில்தான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு, 55 பொதுத்துறை நிறுவனங்களின் நன்கொடை விவரங்களை ஆர்டிஐ மூலம் திரட்டியுள்ளது.அதில், பிஎம் கேர்ஸூக்கு 2020, மார்ச்மாதத்துக்குள் ரூ. 3,076 கோடி நிதி கிடைத்ததாக கூறப்படும் நிலையில், 38 பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும் ரூ. 2 ஆயிரத்து 105 கோடியே 38 லட்சத்தை அள்ளிக்கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், ஓஎன்ஜிசி அதிகபட்சமாக ரூ.300 கோடி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ரூ. 120 கோடி, பவர் பைனா
ன்ஸ் கார்ப்பரேசன் ரூ.150.28 கோடி, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் ரூ. 13 மற்றும் 25 கோடிகள், பவர்கிரிட் கார்ப்பரேசன்நிறுவனம் ரூ. 130 மற்றும் 70 கோடிகள், ரூரல் எலெக்ட்ரிபிகேசன் கார்ப்பரேசன் நிறுவனம் ரூ. 156.68 மற்றும் 50 கோடிகளை வழங்கியுள்ளன. ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ரூ. 15 கோடிகளை வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக லாபமே ஈட்டாத செயில் நிறுவனமும் கூடரூ. 33 கோடிகளை வாரிக் கொடுத்துள்ளது.ரூ. 2105 கோடி நிதியான, இந்த 38 நிறுவனங்களின் 5 மாதகால பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.