tamilnadu

img

ஆபத்தான நோயாளி ஐசியு-வுக்கு வெளியே... பொருளாதாரம் குறித்து ப. சிதம்பரம் பேச்சு

புதுதில்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியமுன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், மத்திய பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.வேளாண்மை, வெறும் 2 சதவிகிதம் மட்டும்வளர்ந்துள்ளது. ஆனால், நுகர்வோர் விலை பணவீக்கம் 11 மாதங்களில் 5.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் 12.2 சதவிகிதமாக உயர்ந்துள் ளது. பல்வேறு வகையான கடன்கள் சரிவைச்சந்தித்துள்ளன. ஒட்டுமொத்த தொழில் குறியீட்டு எண் வெறும் 0.6 சதவிகித வளர்ச்சிதான் அடைந்துள்ளது. கடந்த 2019-2020 பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, மூலதன செலவு, நிகர வரி வருவாய் என எதுவுமே இலக்கை எட்டவில்லை.

இதுதான் பொருளாதாரத்தின் நிலை. இதைப் படம்பிடித்து காட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவையில்லை.பாஜக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், “இந்தியப் பொருளாதாரம், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது” என்று கூறினார். ஆனால், நான் சொல்கிறேன். தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே நோயாளி இருக்கிறார். அவருக்கு திறமையற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நோயாளி இருப்பதும், திறமையற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதும் மிகவும் ஆபத்தானது. மோடி அரசால் அடையாளம் காணமுடிந்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல்,முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகிய திறமையான மருத்துவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். தற்போது மத்திய மோடி அரசிடம் இருக்கும் திறமையான மருத்துவர்கள் யார்? என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதும், அவசர கதியிலான ஜி.எஸ்.டி.யும்நினைவுச் சின்னங்களாகி விட்ட தவறுகளாகும். இவை பொருளாதாரத்தை அழித்து விட்டன. ஆனால் தனது தவறு
களை மோடி அரசு ஒப்புக்கொள்வதே இல்லை. இவ்வாறு ப.சிதம்பரம் பேசியுள்ளார்.