tamilnadu

img

அசாம் ‘சூப்பர் ஸ்டார்’ பாஜகவிலிருந்து விலகல்... குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

திஸ்பூர்:
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தபாஜக நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக விலகி வருகின்றனர்.இந்நிலையில், குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநில சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஜதின் போராவும், அவருடன் வேறு சில நடிகர்களும் பாஜக விலிருந்து விலகியுள்ளனர்.அசாம் மாநில திரைப் பட நிதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் ஜதின் போரா, “நான் குடியுரிமைச் சட்டமசோதாவை ஏற்றுக் கொள்ளவில்லை; மாறாக கடுமையாக எதிர்க்கிறேன். எனதுஜதின் போரா எனும் அடையாளம், அசாம் மக்களால் எனக்கு அளிக்கப்பட்டது. முதலில் நான் நடிகன். அதன் பிறகுதான் அரசியல்வாதி. எனவே, குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக இருக்கவே நான்விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், பாஜக-விலிருந்து விலகியுள்ள அவர், வாரியத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு,அசாமைச் சேர்ந்த மற்றொருபிரபல நடிகர் ரவி சர்மாவும்பாஜகவிலிருந்து விலகினார். அசாமிய திரைப்பட சகோதரத்துவ அமைப்பின் பலஉறுப்பினர்களும் இதேபோல வெளியே வந்துள்ளனர்.