லக்னோ:
மத்திய பாஜக அரசானது, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புக்களைத் தவறாக கையாண்டு வருவதாகவும், இந்த அமைப்புக் கள் மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டி அச்சுறுத்தி வருவதாகவும் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் இருந்து வருகின்றன.இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாயாவதி, அகிலேஷ் ஆகிய பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது, சிபிஐகுற்றப்பத்திரிகை தயாரித்து இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011-12ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் 21 சர்க்கரை ஆலைகளை விற் பனை செய்ததில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மோசடி செய்து இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளது.அதேபோல, 13 சுரங்கங்களை ஏலம் விட்டதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷூம், முறைகேடு செய்து இருப்பதாகசிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதற்கானகுற்றப்பத்திரிகையும் தயாரிக்கப்பட்டுள்ளது.