விருதுநகர்:
மோட்டார் வாகனங்களுக் கான கடன் தவணைகளை கட்டஓராண்டு கால நீட்டிப்பு செய்துதர ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும். தவணை செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது. வாகனங்களில் ஒளிரும் சிவப்பு ஒட்டு வில்லைகளுக்கு மாநில அரசு கட்டணம்நிர்ணயம் செய்ய வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனம் மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர் தொழிலாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜி, சம்மேளன மாநில நிர்வாகிஜி.வேலுச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் பி.ராமர், எம்.சாராள்உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டாக்சி-வேன் (சிஐடியு) சங்கத் தலைவர் சேவுகபாண்டியன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை, மாவட்டத் துணைத்தலைவர் கணேசன், இராஜபாளையம் டாக்சி வேன் சங்கசெயலாளர் கண்ணன், சத்திரப்பட்டி சங்கத் தலைவர் அழகர்சாமி, சிஐடியு நிர்வாகிகள் சந்தானம், வீர சதானந்தம், காமாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.